மேகங்களை ஆரத்தழுவும்
இரட்டைக் கோபுரத்தைப்
இரட்டைக் கோபுரத்தைப்
பார்க்கும் போதெல்லாம்
கண்களில்
நிற்பது என்னவோ
ரப்பர் தோட்டங்களும் ஈய லம்பங்களும்தான்
பிரமாண்டமான புத்ரா ஜெயாவில்
பார்க்கும் இடமெல்லாம்
எங்கள் உழைப்பின் கல்லறைகள்
வாழ்ந்த
சுவடுகளின் மிச்சம்
அங்கும் இங்கும்...
ஒற்றைக் கோபுரமும்,
நாலு கால் தகரக் கூரைகளும்தான்.
இன்றோ நாளையோ
அதுவும் உடைபடலாம்.
உழைப்பும் போராட்டமும்
தியாகங்களும்...
வந்தேறிகள் என்ற போர்வைக்குள்
மறைக்கப்பட்டு விட்டன.
ஓர் இந்தோனிசியனைப் போல்
ஒரு பங்களாதேசியனைப் போல
நாங்களும் வந்தேறிகளாம்.
பதில் தெரியவில்லை
வழி தெரியவில்லை
வாழ்க்கை முழுவதும்
வலி மட்டும் வியாபித்திருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக