காதல் கண்களில்
தெறிக்கிறது
காதலின் விசும்பல்
காத்திருந்த காலங்களில்
கருப்பு வெள்ளையாய்
நம் நிழல்கள்
நீ நானானாய்
நான் நீயானேன்
நிகழ்காலங்களில்
கலர் கலராய்
நம் நிழல்கள்
நீ நீயானாய்
நான் நானானேன்
தியாகம்
எனப் பெயரிட்டு
காதலுக்கு அஞ்சலி செய்தோம்
உன் அவன்
என்னைவிடச் சிறந்தவன்
என் அவள்
உன்னைவிடச் சிறந்தவள்
தூரமாய்
ஒரு விசும்பல்....
'என்ன சத்தம் அங்கே?'
'காதல் அழுவுது'.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக