அன்று
நெஞ்சில் பூவாய்ப் பூத்தாய்.
இன்று ஏனோ...
தீப்பிழம்பாய் சிவந்தாய்
எரிமலையின் லாவாக்களாய்
தேள்வார்த்தைகளைக் கொட்டினாய்
வெயில் பட்ட மண்புழுக்களாய்
மனம் நெளிந்தது.
காதல் வண்ணத்துப் பூச்சிகளாய்
உன்னைச் சந்திக்கும்
ஒவ்வொரு முறையும்
நான்
ஊமையாகிப்போகிறேன்
உன்னைப் புடவையில்
பார்க்கும்
ஒவ்வொரு பொழுதும்
என் சந்தோஷங்களை
உனக்குள் ஒளித்து வைத்தாய்
என் புன்னகையை
உனக்குள் பூட்டி வைத்தாய்
கண்ணீரைக் கூட
நான் காயவிடுவதில்லை
ஒவ்வொருச் சொட்டிலும்
உன் முகம்
காயாத கண்ணீருடன்
ஒலிம்பிக் தீபமாய்
காதல் சுமைகளை
ஏந்திக் கொண்டு
என் நினைவுக்கழுதை
காதலின் முகவரியைத் தேடி
உன்னைச் சுற்றியே வட்டமடிக்கிறது.
- தேடல் தொடரும்................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக