வியாழன், 17 பிப்ரவரி, 2011

தேடல்

மானுட மனங்களின்
இருதலை அரவம்

ஒற்றைக்கால்
கொக்கின்
தவம்

மனிதத்தைத் துறந்த
மானுட கரங்கள்
மனித நேயத்தை
தொலைத்து நிற்கின்றன

மரணப் பார்வைகளின்
அமுக்கப்பட்ட புள்ளியாய்
அன்பின் வளையங்கள்

இல்லறம் துறந்தவர்களின்
யாகப்பொறிகள்
யாரின் தாகத்தையும்
இங்கு தணிக்கப்போவதில்லை

நம்பிக்கை நம்பிக்கையின்மை
இருகோடுகளின் விளிம்பில்
கோர வெறியாட்டம்

திட்டுத்திட்டாய்
மனித உதிரங்கள்
வலங்கை இடங்கை
வேற்றுமை
இதில் இல்லை

வானம்
கடல்
பூமி
புத்தகம்

சூன்யப்பாதையில்
ஒரு பயணம்

தெரிவதுபோல் தெரியும்
எதுவும் தெரிவதில்லை
புரிவதுபோல் புரியும்
எதுவும் புரிவதில்லை

தேடல்
தேடலுக்குள்
ஒரு தேடல்

தேடல்
ஒரு தொடரும் வேட்டை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக