திங்கள், 14 பிப்ரவரி, 2011

பிப்ரவரி 14


மீண்டும் மீண்டும்
தலைப்பிரசவம்
என் காதலுக்கு

வைகறைப் பொழுதின்
ரோஜா இதழ்
நுனிப் பனி
என் காதல்

காதல்
நிலத்தினும் பெரிதே
வானினும் உயர்ந்ததே
கடலினும் ஆழமானதே
எனப்பாட
நான் சங்கப்புலவனல்ல..

இந்த யதார்த்த வாழ்க்கையின்
காதல் விரும்பி

என் அருகில்
உன் நிழலாடாவிட்டாலும்
என் மனதோடு
உன் காதலாடுகிறது

என்னை
வானுயர வீசினாலும்
உன் காலடியில்
வந்து விழும்
என் காதல்

காதலுக்காக
இலக்கியத்தை நேசித்தவன்
இன்று வாழ்க்கைக்காக
காதலை நேசிக்கிறேன்

பிப்ரவரி 14
இன்றோடு முடிந்துவிடுவதில்லை
மீண்டும் மீண்டும்
புதிதாய்ப் பிறக்கும்
என் காதலைப் போல........

4 கருத்துகள்:

  1. 'என்னை
    வானுயர வீசினாலும்
    உன் காலடியில்
    வந்து விழும்
    என் காதல்' -
    அழகான வரிகள்!

    உரைநடையில் அதிகம்
    உலவியவர் நீங்கள்!
    கவிதை வயலிலும்
    இறங்கியுள்ளது
    மகிழ்ச்சியைத் தருகிறது

    இணைய வாகனத்தில்
    உங்கள்
    கவிதைச் சிறகுகள்
    இன்னும் விரியட்டும்!

    ந.பச்சைபாலன்
    www.patchaibalan.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கருத்துக்கும் வரவேற்பிற்கும் என் நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  3. kaathal,mane pirapanca iyangku talam. Athirvukalai tanggum itayakuuddil taluvi sellum thendral. Ithamake iruntatu unggal kaatal roja.(kavitahi)

    பதிலளிநீக்கு
  4. நன்றி சுபன் சுங்கைவே அவர்களே...
    உங்களின் படைப்புகளையும் இணையத் தளத்தில் காண ஆவலாய் உள்ளேன்

    பதிலளிநீக்கு