வாழ்க்கையைத் தேடி
ஒரு பயணம் தொடர்கிறது
அழுத விழிகளுடன்
சில காத்திருப்புக்கள்
யாருடைய மனசிலோ
யாருக்காகவோ
மரணபயம் வரும் வரை
இஷ்டத்துக்குத் தாவும்
மனசுக்கு எதுவும் புரிவதில்லை
சொல்வதை
மனம் கேட்பதுமில்லை
கேட்கும் அளவுக்கு
யாரும் சொல்வதுமில்லை
ஒவ்வொரு பொழுதும்
வெவ்வேறு ஆசைகள்
ஒவ்வொரு விழிப்பிலும்
வெவ்வேறு தேவைகள்
வெவ்வேறு தேவைகளுக்கும்
வெவ்வேறு போராட்டங்கள்
தன்னிலை மறப்பது மட்டும்
வழக்கமாகி
வாழ்க்கையாகிப் போனது
இரவை மட்டும் நேசித்து
பகலை வெறுப்பது
இப்பொழுதெல்லாம் புதுசல்ல
ஆசைகளுக்கும் தேவைகளுக்கும்
புதைபடுவதும்
மீண்டு எழுவதும்
இங்கு வாழ்வாகிப்போனது
அப்பா அம்மா
அண்ணன் தம்பி
அக்கா தங்கச்சி
மனைவி மகன் மகள்
உறவுகள்
தண்டவாளத்தைப் போல்
இரு நேர்க்கோடுகளாக விரிய
ஒற்றைத் தவமாய்
முதுமை வாழ்க்கையில்
தூசு படிந்த நினைவுகள்
மட்டும்
மனசுக்கு நிழலாய் நிற்கின்றன....
ஒரு பயணம் தொடர்கிறது
அழுத விழிகளுடன்
சில காத்திருப்புக்கள்
யாருடைய மனசிலோ
யாருக்காகவோ
மரணபயம் வரும் வரை
இஷ்டத்துக்குத் தாவும்
மனசுக்கு எதுவும் புரிவதில்லை
சொல்வதை
மனம் கேட்பதுமில்லை
கேட்கும் அளவுக்கு
யாரும் சொல்வதுமில்லை
ஒவ்வொரு பொழுதும்
வெவ்வேறு ஆசைகள்
ஒவ்வொரு விழிப்பிலும்
வெவ்வேறு தேவைகள்
வெவ்வேறு தேவைகளுக்கும்
வெவ்வேறு போராட்டங்கள்
தன்னிலை மறப்பது மட்டும்
வழக்கமாகி
வாழ்க்கையாகிப் போனது
இரவை மட்டும் நேசித்து
பகலை வெறுப்பது
இப்பொழுதெல்லாம் புதுசல்ல
ஆசைகளுக்கும் தேவைகளுக்கும்
புதைபடுவதும்
மீண்டு எழுவதும்
இங்கு வாழ்வாகிப்போனது
அப்பா அம்மா
அண்ணன் தம்பி
அக்கா தங்கச்சி
மனைவி மகன் மகள்
உறவுகள்
தண்டவாளத்தைப் போல்
இரு நேர்க்கோடுகளாக விரிய
ஒற்றைத் தவமாய்
முதுமை வாழ்க்கையில்
தூசு படிந்த நினைவுகள்
மட்டும்
மனசுக்கு நிழலாய் நிற்கின்றன....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக