காத்திருப்பு
இரு நூறு வருடங்களாக
ஒரு காத்திருப்பு
காத்திருந்த அவர்களைச்
சுற்றி
உஷ்ணத்தின் பெருக்கம்
யாரேனும் அவர்களை
நெருங்கியபொழுதே
முற்றிலுமாக
சாம்பலாக்கிவிட்டிருக்கலாம்
அவர்களுக்குள்
அவர்களைச் சுற்றிச் சுழலும்
எண்ண அலைகள்
வெப்பக்கீற்றுகளாய்
அவர்களை ஆடாத அசையாத
சிலைகளாக்கிவிட்டிருக்கிறது
காத்திருப்பின் சுதந்திரம்
ஒற்றை வேலியாய்
அவர்களை
வளைத்துப்போட்டிருக்கிறது
இங்கு இன்னமும்
காத்துக்கொண்டிருக்கிறார்கள்
காற்றில் மிதக்கும் நம்பிக்கைகளாய்
மீண்டெழுவோம் என்று
இந்தக் காத்திருப்பில்
உறைந்துபோனது கட்டிப்பால்
மட்டுமல்ல
இவர்களின் குருதியும்தான்
இந்தக் காத்திருப்பானது
இறுதிவரை
ஒரு காத்திருப்பாகவே
முடிந்தும் போகலாம்
காற்றின் அலைவரிசைகளில்
புதியதொரு வரலாற்றை
புனைந்துவிட்டும் போகலாம்
- எம்.சேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக