ரகசிய இரவுக்குள்
முகிழ்கிக்கும் புனைவு
தோயாத உணர்வுகளில் அரும்பிப்
பூத்திருந்தது
சுய புணரல்
ஒற்றைக்கையில் நிறுத்தப்பட
ரகசிய அரங்கத்தின்
ஒற்றைக்கால் தூண்களின்
வேர்க்கிளைகள்
புதைக்கப்பட்ட ஒன்றை
வீசியெறிந்ததாகப் பரவும்
பிம்பம்
அசாதாரண உரசல்களின் மிச்சம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக