வியாழன், 14 ஜூலை, 2011

தாமரையில் பூத்த முகம்
அழகு மயிலாய் ஆடும் அலையாய்
பழகு தமிழாய் கூவும் குயிலாய்
செந்தூ ரப்பூ மேனியாள் விழியால்
செந்தமிழ் மொழியால் காதல் சொன்னாள்

நிலாமுற் றம்தனில் தனியே நின்றேன்
நிலவும் இல்லை நிழலும் இல்லை
வானம் மதியை இழந்து நின்றது
விண்ணைப் பார்த்தேன் தவித்தேன் துடித்தேன்

கவிதை ஆயிரம் மனதில் கனக்க
காவிய தேச கவிவரி வாசமாய்
கனவைத் தொலைத்து இரவை வாங்கி
நினைவில் நுழைந்து உள்ளம் திறந்தேன்

பொற்றா மரையாய் நெஞ்சிலே பூத்தாய்
பூந்தேன் சுவையாய் நாவிலே தவழ்ந்தாய்
கொஞ்சும் வார்த்தை மனதைக் கிள்ளுதே
கொஞ்சும் கிளியுன் னைக்கண் தேடுதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக