தூரத்துக் கானல்
வண்ணம் உகழ்ந்த வானத்தைப்போல
ஒப்பனைகளற்ற வாழ்க்கையின்புனைவுகள்
இருளின் வெளிச்சத்தில்
உழப்படும்
நித்திரையின் சதைத்துணுக்குகளாகி
ஒவ்வொரு விநாடியும்
உயிர்ப்பித்து அழுகின்றன
பகற்சூழலின் உணர்ச்சிகளில்
உருகிய வாசனைகள்
உடல் முழுக்க ஊர்ந்து
பூத்தாமரையாய் மேலெழும்பி
விழுகின்றன
நீர்மனத்துக்குள்
செதிலுரித்துச் செல்லும்
நீண்ட காம்புகளாய்
உன் நினைவு
முத்தத்தில் மூழ்கித்த
உதடுகள்
வெப்பப் பசையினால்
நீர்த்துப் பூத்தன
நினைவுகளை விழுங்கமுடியாமல்
அழுகிறது மனசு
வெப்ப மண்டலங்களில்
ஈரப் பதத்தைத் தேடும்
காற்றாய்
என்றோ நிர்வாணமான
என்னாசைகள்
உள்ளத்தை மொழிபெயர்த்துக்
காட்டுகிறது
உணர்ச்சிகளை மழித்துவிட்டு
தூரத்தில் கானலாய்
ஒரு காதல்
காத்துக் கொண்டிருக்கிறது
- எம்.சேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக