ஒவ்வொரு பொழுதும்
உன்னை
வென்றிட நினைத்து
உனக்குள் மூழ்கித்து
நானே
மூழ்கிப்போகிறேன்
உன்
விசாலப் பார்வைக்கு
சில
ஒத்திகைகள்
ஒவ்வொரு பொழுதும்
மீளாமல்
நீண்டுகொண்டேயிருக்கின்றன
எனக்குத் தெரியும்
என் மரணம்
நிச்சயிக்கப்பட்ட ஒன்றென
சொல்ல வந்ததை
சொல்லாமலேயே
உன்
நாக்கைக் கடித்து
துப்புகிறாய்
இரவின் நிசப்தங்களில்
அந்த இரவின்
அழுகுரல்
எனக்கு மட்டும்
கேட்டுக்கொண்டேயிருக்கிறது
உன்னை
வென்றிட நினைத்தவன் நான்
உனக்காக
அனுதாபப்பட்டு
உனக்குள்
சரணாகதியாகிறேன் இப்போது
நான் நீயானாய்
நீ நானானேன்
நாம் இருவரும்
ஒன்றானோம்
உன்னைப் பற்றிய
பயம்
இப்போதெல்லாம்
எனக்கில்லை
ஏனெனில்
நான்தான் நீ
நீதான் நான்
நான் இருக்கும்வரை
நீ இருப்பாய்
நீ இருக்கும்வரை
நான் இருப்பேனா
வாழும்வரை
எனக்காக காத்திருப்பாயா
சொல்லடி என் காலக்காதலியே....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக