வெள்ளி, 17 ஜூன், 2011

நினைவில்லை......

நினைவில்லை.

நினைத்துப் பார்த்தேன்
நினைவில்லை.

எனக்கேத் தெரியாமல்
யாரும் பார்க்காதவாறு
எனக்காக நடந்திருக்கிறதா?

நினைவில்லை.

மனசுக்குள்
ஆழமாக நுழைந்து
நினைவுகளைத் தோண்டிப் பார்த்தேன்

நினைவில்லை.

வானம் கடலாகவும்
மேகம் அலையாகவும்
விழிச்சாளரத்தில்
திரை போட்டு நெளிகின்றன
எனக்காக.

ஈரக் கசிவுகளின் தாயகம்
இதயமா? கண்களா?

இதயம் முன் நின்றால்
நான் மனிதன்

கண்கள் முன் நின்றால்
நான் ஏதோ.....

(குறிப்பு- ந.பச்சைபாலனின் 'கடைசியாக எப்போது அழுதீர்கள்?' கவிதை வாசிப்பின் போது எனக்குள் விழுந்த மனப்பதிவுதான் இப்படைப்பு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக