புதன், 27 ஜூலை, 2011

Go to fullsize image

விழிகளின் ஓரத்தில்
இன்னும் மிச்சமிருப்பது
உன் முகம் மட்டும்தான்
பகலில் பூக்கும் வானவில்லைப் போல....

வியாழன், 21 ஜூலை, 2011

Go to fullsize image

ஒடிந்து விழுந்தது கிளை
நேற்றைய ஆணவச் சிரிப்பு
தேடலில் மனிதர்கள்

புதன், 20 ஜூலை, 2011



வானம் கருக்கிறது
குதூகலத்தில் நனைந்திடும் தவளை
பட்டினியோடு பாம்பு



காற்று வெளியில்
காதலின் உதடுகள்
ஈரத்தோடு விழிகள்

வியாழன், 14 ஜூலை, 2011



தனிமையில் இரவு
கூட்டுக்குத் திரும்பும் நிலவு
மொன அஞ்சலிகள்

தாமரையில் பூத்த முகம்




அழகு மயிலாய் ஆடும் அலையாய்
பழகு தமிழாய் கூவும் குயிலாய்
செந்தூ ரப்பூ மேனியாள் விழியால்
செந்தமிழ் மொழியால் காதல் சொன்னாள்

நிலாமுற் றம்தனில் தனியே நின்றேன்
நிலவும் இல்லை நிழலும் இல்லை
வானம் மதியை இழந்து நின்றது
விண்ணைப் பார்த்தேன் தவித்தேன் துடித்தேன்

கவிதை ஆயிரம் மனதில் கனக்க
காவிய தேச கவிவரி வாசமாய்
கனவைத் தொலைத்து இரவை வாங்கி
நினைவில் நுழைந்து உள்ளம் திறந்தேன்

பொற்றா மரையாய் நெஞ்சிலே பூத்தாய்
பூந்தேன் சுவையாய் நாவிலே தவழ்ந்தாய்
கொஞ்சும் வார்த்தை மனதைக் கிள்ளுதே
கொஞ்சும் கிளியுன் னைக்கண் தேடுதே

செவ்வாய், 12 ஜூலை, 2011


விடியலின் பனிமுட்டை
நாணல்களின் கண்ணீர்த் துளிகள்
விடியும் மனமுகங்கள்