ஞாயிறு, 8 மே, 2016

தொலைதலும் தேடுதலும்

தொலைதலும் தேடுதலும்

மின்னொலியில் உன் பிம்பங்கள்
பிரவேசிக்கும் மனவெளிக்குள்
மீண்டும் மீண்டும்
மெருகேற்றித் துடைக்கப்படும்
ஒப்பனைகள்
மின்னோட்டம் தடைபட்ட
அந்த ஒரு கணத்தில்

பொதித்து வைத்திருந்த வார்த்தைகள்
கனவுக்கடைகளின்
வீதியோர அடுக்குகளில்
மலிவுப் பதிப்பாகச் சிதறி விழுந்தன

பிறிதொரு கனவில்
என்னிடமிருந்து பெறவேண்டியதை
எப்படியோ எடுத்துக்கொண்டு விட்டாய்

மௌனத்தின் நிழல்கொண்டு
கடந்துபோகும் என் வாழ்க்கை இனி

தொலைந்ததைத் தொலைத்ததைத் தேடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக