அழகு
தனிமையின் இரவில் காலம் தவித்திருக்க
தெரியாத உறவின் வார்ப்புகள் விழித்திருக்க
திசையறியா பறவையாய்த் திரிந்திருக்க
தேரோடும் மனத்தோடு ஒரு மனம் பறந்திருக்க
சொல்வேந்தர் பட்டறையில் எழுத்துகளைத் தீட்டியிருக்க
சொற்களைத் தேடித்தேடி இங்கு அலைந்திருக்க
சொன்னதைச் சொன்னபடி இங்கு தந்திருக்க
சொல்லாமல் போன செய்திகள் ஆயிரம் இங்கிருக்க
வேற்று தேசம் தரும் மாயையில் மூழ்கியிருக்க
வேறேதும் பதியாமல் பதித்த சுவடுகளிலேயே
பதிந்திருக்க
வேறென்ன சொல்லலாம் என நானிருக்க
வெறெதுவும் சொல்லாதே என படைத்தவன் பார்த்திருக்க
இலக்கியம் இங்கே தனிமையில் அழுதிருக்க
இரவுகள் இங்கே அடுத்த தலைமுறைக்காகக் காத்திருக்க
இலக்கியம் பண்ண கூட்டம் துடித்திருக்க
இரவுகள் இலக்கியத்தைக் காண பசித்திருக்க
எல்லாமே எல்லாமே அழகாம் இங்கே
எல்லாமே மனம் பார்க்கும் பார்வையிலே
நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு கவிதை மழையில் சுகமாய் குளித்த ஓர் உணர்வு. துளிதுளியாய் மனதினில் சில்லென்று இறங்கிய வரிகள் தரும் பரவசம். அருமை சேகர்கவிதன்
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு