செவ்வாய், 15 மே, 2012

சின்னஞ்சிறு கவிதைகள்


சுடும் நாக்கு

எரியும் வார்த்தை

கருகும் மனசு


@@@@@@@@@@@@@@@@@@


சுடும் வெயில்

அமைதியான வானம்

குளத்தில் மீன்கள்@@@@@@@@@@@@@@@@@

தோழியே

தோழியாய் மட்டும் இரு

நட்பாவது

வாழ்ந்துவிட்டுப் போகட்டும்


@@@@@@@@@@@@@@@@@துப்பட்டாவை

தேசிய சின்னமாக்குங்கள்

கவிஞன் பிறக்கிறான்


@@@@@@@@@@@@@@@@@நீல வானத்து நிலவாய்

சிரிக்குதடி உன் முகம்

மனசுக்குள்


@@@@@@@@@@@@@@@@@
மெட்டுக்குப் பாட்டு

தனிமையில்
 
கவிதை


@@@@@@@@@@@@@@@@@நினைத்தேன்

தவித்தேன்

துடித்தேன்மலைத்தேன்

மகிழ்ந்தேன்

உயிர்த்தேன்சொல்தேன்

தமிழ்த்தேன்

அரும்தேன்நின்தேன்

சுவைத்தேன்

தொலைந்தேன்


@@@@@@@@@@@@@@@


அடுக்குமாடி வீட்டு நிழல்

நம்பிக்கைகளை

கான்கிரீட் சுவருக்குள் புதைத்து

நாளையப் பொழுதை விரட்டியடிக்கிறதுகையறுநிலையும் து((தூ)க்கமும்

தலைவிரித்தாடுகிறது விலைவாசியைப்போல்

நம் சமூகத்தில்


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எனக்குள் நுழைந்தாய்

சுவாசமானாய்

நான் கவிஞனானேன்


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@அட்டையாய் உறிஞ்சுகிறது

மாற்று மொழியாய் ஒன்று

வாழும் மொழி தமிழென

ஊமை சமூகம்@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக