ஞாயிறு, 22 மே, 2011

தேவைகள்

இலட்சக்கணக்கில் மடிந்தான்
தமிழன்
ஊமை உலகம்

ஆயிரம்பேர்கள் மடிந்தனர்
லிபியாவில்
கூவும் உலகம்

தமிழீழமண்ணில் மனிதத்தைத் தவிர
வேறொன்றுமில்லை

லிபியாவின் மண்ணில்
எண்ணெய் வளம்
வியாபார மனம்

நேயங்கள் உறவுகளாகத்
தேவைகளுக்கேற்பத் தன்னைப்
புதுப்பித்துக் கொள்ளும் பொழுதெல்லாம்
மனிதம் இங்கே தூக்கிலிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக