வியாழன், 3 மார்ச், 2011

எனக்கான ஹைக்கூ நீ

உன் இதழ்மொழி
எனக்கான ஹைக்கூ.

உனக்கு ஏன்
தனி அணி?
வெட்கமே
உன்னை அணிந்திருக்கையில்...

மௌனத்தில் நீ
மோகமழையில் நான்

புத்தம் புது தாமரைகளாய்
கனவுக்குளம்
நானானேன்
சின்னச் சின்னச் சிதறல்களாய்
நீர்த்தேக்கம்
நானானேன்

மழைக்காலத் துளிகள்
உடலைத்தான்
நனைக்கையிலே
மனமெல்லாம் உன்கைகள்
உயிரைத்தான்
உருக்கையிலே

விழிமொழி பேசும்
என் காதலியே
விரலாலும்
நீ பேசுவதும்
எனக்கு மட்டும்தான்

உன் இதயமொழியும்
எனக்கான ஹைக்கூ
மட்டும்தான்.

4 கருத்துகள்:

  1. மௌனத்தில் நீ மோக மழையில் நான், இரண்டு கருத்துகளும் முரணாக இருந்தாலும் பொருள் தரும் படிம அழகில் சிறக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. உங்களின் கருத்துக்கும் இந்த இணையப் பகுதியைத் தொடர்ந்து வருவதற்கும் என் அன்பான நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. மெட்டுக்குள் அமர வைத்தால் இது அழகான காதல் பாடலாக
    உருமாறும்.

    புத்தம் புது தாமரைகளாய்
    கனவுக்குளம் நானானேன்
    நித்தம் உன் கைபறித்தும்
    குளமெங்கும் நான் நிறைந்தேன்

    ரத்தத்தில் உன் குரலே
    எப்போதும் கேட்குதடி
    மொத்தமாய் எனை வீழ்த்தும்
    வித்தை எங்கே கற்றாயடி?

    எத்தனையோ முகம் பார்த்தும்
    என் முகத்தைக் காணலையே
    இரத்தினமே உன் வரவால்
    சத்தியமாய்த் தெளிந்தேனே!

    இப்படி எழுத்திக்கொண்டே போகலாம், சேகர்
    அதற்கான உயிர்ப்பு இந்தப் படைப்பில்
    உள்ளது.

    ந. பச்சைபாலன்

    பதிலளிநீக்கு
  4. நன்றி பாலா.
    கவிஞனுக்குள் ஊறும் உணர்வுகள், சில விநாடிகளில் எழுத்துகளாகக் கொட்டும். சில சமயங்களில் எழுத்துகளே கவிதைகளாகும். பாடல் வரிகள் நன்று. காதல் தன் முகம் புதைத்து வாழ்கிறது கவிதைகளில்....

    பதிலளிநீக்கு