உன் இதழ்மொழி
எனக்கான ஹைக்கூ.
உனக்கு ஏன்
தனி அணி?
வெட்கமே
உன்னை அணிந்திருக்கையில்...
மௌனத்தில் நீ
மோகமழையில் நான்
புத்தம் புது தாமரைகளாய்
கனவுக்குளம்
நானானேன்
சின்னச் சின்னச் சிதறல்களாய்
நீர்த்தேக்கம்
நானானேன்
மழைக்காலத் துளிகள்
உடலைத்தான்
நனைக்கையிலே
மனமெல்லாம் உன்கைகள்
உயிரைத்தான்
உருக்கையிலே
விழிமொழி பேசும்
என் காதலியே
விரலாலும்
நீ பேசுவதும்
எனக்கு மட்டும்தான்
உன் இதயமொழியும்
எனக்கான ஹைக்கூ
மட்டும்தான்.