எச்சங்கள்
காதற் காலங்களின்
சில காத்திருப்புகள்
இன்று என்னவோ
நினைவுகளின் எச்சங்களாக
நெருடுகின்றன.....
பக்கத்து வீட்டுக் காதல்
பள்ளிக்கூடக் காதல்
கல்லூரிக் காதல்
பணியிடத்துக் காதல்
பெற்றோர் பார்த்தக் காதல்
கல்யாணக் காதல்
இப்படியாகப்
புதுப்புது பரிமாணங்கள்
மனம் மட்டும் நிலா
நினைவு மட்டும் வானம்
உணர்வுகள் மட்டும் அலை
தள்ளாடும் உடல்
ஊசலாடும் உயிர்
நிலையற்றக் காதல்
விழியோரம்
தேங்கிக் கிடக்கிறது
விழும்
ஒவ்வொரு துளியிலும்
காதலின் முகம்
தாலி கட்டியவள்
அழுகிறாள்
என் விழிக்கண்ணீருக்குக்
காரணம்
அவள்தானென்று.......
- சேகர் கவிதன்
அன்பிற்கினியவர்களே....
பதிலளிநீக்குநான் வலைப்பகுதிக்குப் புதியவன்.
வழிகாட்டி வழிநடத்துங்கள்..
அன்புடன்
சேகர்கவிதன்