புதன், 20 ஜனவரி, 2016

வலமும் இடமும் - எம்.சேகர்வலமும் இடமும்


நேற்றைய இரவின் ஈரம்
இன்றைய விடியலிலும் ஒட்டிக்கொண்டிருந்தது

விடியலில் ஒட்டிக்கொண்டிருந்த இருளில்
முன்நகர்ந்த என்னை மறித்துக்கொண்டிருந்தது
ஒரு பூனை

பூனை வலது புறமாகக் கடந்து சென்றால்
வாழ்க்கை முன்னகரும்
இடது புறமாகக் கடந்து சென்றால்
வாழ்க்கை பின்னகரும் என
நண்பனொருவன் சொன்னது
என் நினைவைப் பின்னிழுத்துப் பார்த்தது

குளிரில் தகித்துக்கிடந்த இறுக்கத்துடன்
அந்தப் பூனை

அதன் வலதுபுறமாக என்னைக் கடந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக