புதன், 20 ஜனவரி, 2016

முகமிழந்த நான் - எம்.சேகர்


முகமிழந்த நான்


என் வாழ்க்கையின் பல நாட்களை
விழுங்கிய முகங்களின் புதிய பிரதிகள்
விழுந்துகிடக்கின்றன எனது காலடியில்

தேகவெப்பத்தின் சூடு
கொஞ்சம் கொஞ்சமாக
நெடும்பகலைச் சுட்டெரித்து
நெடும்இரவுக் கனவுகளைச் சூர்ப்பனகையாக்கி
இன்னுமொரு பிரபஞ்சவெளியில் பிரவேசிக்கிறேன்

கழட்டிவைக்கப்பட்டிருக்கும் பொய்முகங்கள்
உயிர்ப்பெற்று சப்தங்களிடுகின்றன
அழுத முகங்களும்
அழுவதாக நடித்த முகங்களும்
நல்லவன் வேஷமிட்ட கணப்பொழுதுகளும்
நிஜமுகத்தைத் தொலைத்துவிட்ட
அந்த ஒவ்வொரு மணித்துகள்களும்
என் மரணத்தைப் பன்மடங்காக்கி
மரணத்தை நெருங்கமுடியாமல் துரத்தியடிக்கின்றன

முகம் நிறைந்த உலகில்
முகமிழந்த நான்

-    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக