வியாழன், 22 மார்ச், 2012

அதையும் தாண்டி....

 



ஜெனீவாவில் நடக்கும்
மனித உரிமை கூட்டத்தை
வவுனியாவில் கூட்டுங்கள்

வாழ்ந்த மனிதனின்
கடைசி உயிர்
ரத்தக்கறையுடன்
அங்குதான்
விழித்துக்கொண்டிருக்கிறது

அதையும் தாண்டி....

மாண்ட உயிர்க்கும் விலையுண்டு
மறுபடியும் துளிர்ப்போம் மறவாதே!



பரதேசியாய்த் திரிகிறேன்




நினைவுகளின் பதிவுகளில்
உன்
அழுகுரல் மட்டும்
இன்னமும்
அழியாமல் அழைக்கிறது
என்னை
ஒவ்வொரு இரவின் விளிம்புகளிலும்

தூரமாய்த் தூக்கியெறியப்பட்ட
சடலத்தின்
இரத்தச் சதைகளாய்
மேகங்கள்
என் கனவுகளில்
என்னைத் தின்றுகொண்டிருக்கின்றன

கடிகாரத்தின் பெரிய முள்
காலத்தைப்
பனிப்போர்வைக்குள்
ஒளித்து வைத்து
சிறிய முள்ளை
நெருப்புச்சங்கரங்களுக்குள் இட்டு
முனையைத் தீட்டுகிறது

நீ
மென்றுபோட்டச் சொற்கள்
சொற்களல்ல
அவை
நெருப்பின் முனைகள்

அந்த
முனைகளின்
எங்கோ ஒரு தூரத்தில்
பளபளக்கும்
என் உயிர்மூச்சின்
கவசம்

வானமாய்
மேகமாய்
நிலவாய்
காற்றாய்
தென்றலாய்
பூமியாய்
நிலமாய்
கடலாய்
அலையாய்
எங்கும் நீ
வியாபித்து
என்னொடு சல்லாபிக்கிறாய்
என்னை உறிஞ்சுகிறாய்
சக்கையாய்
துப்பிவிட்டுப் போகிறாய்

இன்றுவரை
தேடிக்கொண்டு
பரதேசியாய்த் திரிகிறேன்
உன் வாசலை

பயணம்











குழந்தையாக அரும்பி
சிறுவர், இளையர் என மொட்டுவிட்டு
மனிதனாக மலர்ந்து
இறைபூஜைக்குத் தயாராகும்
பயணம்….
மானிட வாழ்வின்

ஒரு தொடர்வண்டி
நாம் பயணித்துக் கொண்டிருக்கும்
இந்த வண்டியைப் போல.
ஒவ்வொரு நிறுத்தத்திலும்
வெவ்வேறு  முகங்கள்
வெவ்வேறு மனங்கள்
ஒவ்வொரு கட்டத்திலும்
வெவ்வேறு பயணங்கள்
ஒவ்வொரு பயணத்திலும்
வெவ்வேறு அனுபவங்கள்
வாழ்க்கைக்கைப் பாடமாகி
நம்மோடு பயணிக்கின்றன.
Journey

The beginning of an infant
Blossoming from a child to youth
Rising as an adult human
Preparing a journey for the end

The life of human
Like a running train
As we head in our journey
Like the train moves.

In every stops
Different kind of faces
Different kind of people

In every situation
Different kind of journeys
In every journeys
Different kind of experience

Life itself is a lesson
Embedded on us as we move on.

(Translated by JayGanesh)

சனி, 10 மார்ச், 2012

சொல்லடி என் காலக்காதலியே.......





ஒவ்வொரு பொழுதும்
உன்னை
வென்றிட நினைத்து
உனக்குள் மூழ்கித்து
நானே
மூழ்கிப்போகிறேன்

உன்
விசாலப் பார்வைக்கு
சில
ஒத்திகைகள்
ஒவ்வொரு பொழுதும்
மீளாமல்
நீண்டுகொண்டேயிருக்கின்றன

எனக்குத் தெரியும்
என் மரணம்
நிச்சயிக்கப்பட்ட ஒன்றென

சொல்ல வந்ததை
சொல்லாமலேயே
உன்
நாக்கைக் கடித்து
துப்புகிறாய்

இரவின் நிசப்தங்களில்
அந்த இரவின்
அழுகுரல்
எனக்கு மட்டும்
கேட்டுக்கொண்டேயிருக்கிறது

உன்னை
வென்றிட நினைத்தவன் நான்
உனக்காக
அனுதாபப்பட்டு
உனக்குள்
சரணாகதியாகிறேன் இப்போது

நான் நீயானாய்
நீ நானானேன்
நாம் இருவரும்
ஒன்றானோம்

உன்னைப் பற்றிய
பயம்
இப்போதெல்லாம்
எனக்கில்லை

ஏனெனில்
நான்தான் நீ
நீதான் நான்

நான் இருக்கும்வரை
நீ இருப்பாய்

நீ இருக்கும்வரை
நான் இருப்பேனா

வாழும்வரை
எனக்காக காத்திருப்பாயா

சொல்லடி என் காலக்காதலியே....

வியாழன், 8 மார்ச், 2012



எனது மூன்றாவது நூலான, 'நண்பன்' கவிதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா
சிங்கப்பூரில் நடைபெறவிருக்கிறது.

நாள் -  31-03-2012 (சனிக்கிழமை)
நேரம் -  மாலை மணி 6.00 முதல் 9.00 வரை.
இடம் - தலைமையகம், தேசிய நூலகம் (பூகிஸ் எம்.ஆர்.டி அருகில்)
சிறப்புப் பேச்சாளர் - கவிஞர் அறிவுமதி

Launching of my third book 'Nanban' (Friends)

Date - 31 March 2012 (Saturday)
Time - 6.00pm - 9.00pm
Place - National Library HQ (Near Bugis MRT station)
Guest Speaker - Kavinyar Arivumathi