புதன், 14 டிசம்பர், 2011

தமிழா எழுந்திடு !தமிழா எழுந்திடு !

தமிழா தமிழா எழுந்திடு

                தமிழனின் பெருமையை உணர்ந்திடு

தமிழின் செம்மையை அறிந்துநீ

தாய்மொழி தமிழைப் படித்திடுதனித்து துணித்து நிற்காதே

                தனித்தே நீயும் வாழாதே

பிணித்து வாழ கற்றுக்கொள்

      பிரிவினை என்பதை எண்ணாதேஓங்கும் புகழை கொண்டநீ

      ஒதுக்குப் புறமாய் ஒதுங்காதே

ஏங்கி ஏங்கி தவிக்காதே

                எங்கும்  நீஅடி வாங்காதேதமிழன் வீரம் காப்பதற்கும்

      தரணி எங்கும் நிலைப்பதற்கும்

தமிழன் என்ற ஒருசொல்லே

                தரத்தில் உயர்ந்த அருமருந்தாம்


விழித்திடு தமிழா விழித்திடு

                விழியின் தூக்கம் கலைத்திடு

எழுந்திடு தமிழா எழுந்திடு

                ஏற்றம் காண புறப்படுஆண்ட பரம்பரை உனதன்றோ

                ஆ நாடில்லை உனக்கின்றோ

மாண்ட உயிர்க்கு விலையுண்டு

      மறுபடியும் துளிர்ப்போம் மறவாதே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக