ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

எங்கே எனது காதல்? - 2

Go to fullsize image

அன்று
நெஞ்சில் பூவாய்ப் பூத்தாய்.
இன்று ஏனோ...
தீப்பிழம்பாய் சிவந்தாய்

எரிமலையின் லாவாக்களாய்
தேள்வார்த்தைகளைக் கொட்டினாய்
வெயில் பட்ட மண்புழுக்களாய்
மனம் நெளிந்தது.
காதல் வண்ணத்துப் பூச்சிகளாய்
உயிர் முழுக்க ஊர்ந்தது.

Go to fullsize image

உன்னைச் சந்திக்கும்
ஒவ்வொரு முறையும்
நான்
ஊமையாகிப்போகிறேன்

உன்னைப் புடவையில்
பார்க்கும்
ஒவ்வொரு பொழுதும்
வெள்ளியாய் நனைகிறது

Go to fullsize image

என் சந்தோஷங்களை
உனக்குள் ஒளித்து வைத்தாய்
என் புன்னகையை
உனக்குள் பூட்டி வைத்தாய்

கண்ணீரைக் கூட
நான் காயவிடுவதில்லை
ஒவ்வொருச் சொட்டிலும்
உன் முகம்
புதைந்துக் கிடக்கிறது.

Go to fullsize image

காயாத கண்ணீருடன்
ஒலிம்பிக் தீபமாய்
காதல் சுமைகளை
ஏந்திக் கொண்டு
என் நினைவுக்கழுதை
காதலின் முகவரியைத் தேடி
உன்னைச் சுற்றியே வட்டமடிக்கிறது.

- தேடல் தொடரும்................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக